FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாட்ஸ் ஆப்பில் நுகர்வோர் சேவை, முக அங்கீகார வசதி... உணவுத்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து...

அமைச்சர் ப. வெங்கடரமணன் - படம்: சட்டப்பேரவை
பகிர்:

சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் ப. வெங்கடரமணன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் இன்று(ஆக. 20) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து, அமைச்சர் ப. வெங்கடரமணன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

Advertisement

Advertisement

உணவு தானியங்கள் சேமிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களில் மொத்தம் 31,000 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட 15 சேமிப்பு கிடங்குகள் ரூ. 81 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான தானியங்கி இருப்பு கண்காணிப்பு அமைப்பு (Monitoring System Automatic Stock) ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

அனைத்து உணவுப் பொருள்களின் தரத்தினை மதிப்பீடு செய்ய செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கைப்பேசி செயலி ரூ. 1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

பொது மக்களின் வசதிக்காகவும், பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்துவதற்காகவும் புதியதாக 150 நியாயவிலைக் கடைகள் பிரித்து அமைக்கப்படும்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக முக அங்கீகார வசதியுடன் (Face Authentication) கூடிய விற்பனை முனைய இயந்திரம் ரூ. 59 லட்சம் செலவில் முதல்கட்டமாக 150 நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் துறைகளை ஒருங்கிணைக்க, புதிய ஒன்றிணைந்த கண்காணிப்பு இணையதளம் (Unified Monitoring Web Portal) உருவாக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் மற்றும் அமுதம் அங்காடிகளை கண்காணிக்க, அலுவலர்களுக்காக ஆய்வு செயலி உருவாக்கப்படும்.

நியாய விலைக் கடைகள் மற்றும் கிடங்கு ஆய்விற்கான கைப்பேசி செயலி உருவாக்கப்படும்.

மாநில நுகர்வோர் சேவைக்காக தானியங்கி உரையாடல் (Chatbot) வசதியுடன் கூடிய வாட்ஸ் ஆப் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

பொது மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு 81 மடிக்கணினிகள் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

summary

Minister P. Venkataramanan announced new initiatives while replying to the debate on the demands for grants for the Food and Civil Supplies Department in the Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments