FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விவசாயிகளைச் சென்றடையாத குறுவை சிறப்புத்தொகுப்பு: தமிழ்நாடு அரசுக்கு உதயநிதி கண்டனம்

குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி....

21 ஆகஸ்ட் 2026, 4:39 pm IST
உதயநிதி - கோப்புப் படம்
பகிர்:

குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.

Advertisement

Advertisement

வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதல்வர் விளக்கினார்.

ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்னையில் அலட்சியம் காட்டுகிறதா?

எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.

விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.

குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

summary

Leader of Opposition Udhayanidhi Stalin urges immediate government action to ensure Kuruvai special package funds reach farmers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments