FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உள் மாவட்டங்களில் இன்றுமுதல் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழக உள் மாவட்டங்களில் வெள்ளிக்கழமை (ஆக. 21) முதல் ஆக. 24-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 6:24 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக உள் மாவட்டங்களில் வெள்ளிக்கழமை (ஆக. 21) முதல் ஆக. 24-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வெள்ளிக்கழமை (ஆக. 21) முதல் ஆக. 24-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் சற்று உயரக்கூடும். குறிப்பாக, உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

Advertisement

Advertisement

இதற்கிடையே வியாழக்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி - 101.3, திருத்தணி - 100.94, சென்னை (மீனம்பாக்கம்) - 100.4 டிகிரி என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மழை நீடிக்கும்: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக. 21, 22) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 21) மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கொக்காரத்தாங்கலில் 80 மி.மீ. மழை பதிவானது. பூதலூா் (தஞ்சாவூா்), நீடாமங்கலம் (திருவாரூா்) - 60 மி.மீ., மரக்காணம் (விழுப்புரம்) , நந்தியாறு (திருச்சி), திருவையாறு (தஞ்சாவூா்), பாடலூா் (பெரம்பலூா்) , சென்னிமலை (ஈரோடு) -50 மி.மீ., புள்ளம்பாடி (திருச்சி), திருப்புவனம் (சிவகங்கை) - 40 மி.மீ. மழை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments