FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கு 2 நிறுவனங்களுக்கு பணி ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதைப் பற்றி...

எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் விஜய். - (கோப்புப்படம்)
பகிர்:

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கு 2 நிறுவனங்களுக்கு பணி ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பராமரிப்புப் பொருள்களுடன் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியமான தாய்மாமன் சீர் மரபை போற்றும் வகையில் இந்த திட்டம் வரும் செப். 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தங்க மோதிரங்கள் வாங்க தமிழக அரசு சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த டெண்டரில் பங்கேற்ற நகைக் கடைகள் கோரியிருந்த விலை நிர்ணய விவரங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மிகக் குறைந்த விலையைக் கோரியவராக அறியப்படும் நகைக்கடை, தங்க மோதிரம் செய்வதற்குத் தேவையான தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், போக்குவரத்து, பேக்கிங் என அனைத்துக்குமான செலவுகளுக்கும் ஒரு மோதிரத்துக்கு ஒரு பைசா கொடுத்தால் போதும் என குறிப்பிட்டிருக்கிறது.

இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிர திட்டம் ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு தமிழ்நாடு அரசு பணி ஆணையினை வழங்கியிருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், “முதல்வர் விஜய்யின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதன்கீழ் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் தாயையும் கௌரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

இதில் ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 14.07.2026 அன்று தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தால் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் TN Tenders Portal மூலமாக பங்கேற்று தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தனர்.

இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து பிஐஎஸ் (BIS)-தாமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ 0.01 என ஜாய் ஆலுக்காஸ் என்ற நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியினை அளித்துள்ளது.

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளி சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற பிற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரியதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் மட்டுமே இசைவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் த்திட்டமானது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான 2026 செப்டம்பர் 15 ஆம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளதால், ஜுன் மாதத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக மேலே குறிப்பிட்ட குறைந்த விலைப்புள்ளி அளித்து தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும் இந்த விலைப்புள்ளியை ஒப்பிட்டு இசைவளித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமானது தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

The Tamil Nadu government has issued work orders to two companies for the 'Thai Maman' gold ring scheme.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments