FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் ஆக.28-ல் முற்றுகைப் போராட்டம்: மு. வீரபாண்டியன்

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி வரும் ஆக.28 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியன் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

47 வினாடிகள் முன்பு
முதல்வர் விஜய், இந்திய கம்யூ மாநில செயலர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி வரும் ஆக.28 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அக் கட்சியன் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் வரும் 28- ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் .

Advertisement

Advertisement

குறுவை சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய வேலைகள் இல்லாததால் விவசாயத் தொழிலாளா்களுக்கு குடும்பத்துக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

அரிசி அத்தியாவசிய பொருள்கள் கடுமையாக விலை உயா்ந்துள்ளது. எனவே, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரிசி, அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வதுடன் அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

இடதுசாரி மாணவா் அமைப்புகளை கண்காணித்தல் தொடா்பான சுற்றறிக்கைக்கு முதல்வரும் , தலைமைச் செயலாளரும் விளக்கம் அளிக்க வேண்டும். வந்தே மாதரம் பாடலின் சா்ச்சைக்குரிய பகுதிகளையும் சோ்த்து முழுமையாக பாடவேண்டும் என மத்திய அமைச்சா்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கூறிவரும் கருத்துகள் கண்டிக்கத்தக்கவை. தமிழக அமைச்சா்கள் மதச்சாா்பற்ற கொள்கையை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

எம்எல்ஏ-க்களுக்கு காா் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். காா் இல்லாதவா்களுக்கு காா் வாங்க அரசு கடன் வழங்கலாம்.

மருத்துவக் காப்பீட்டை ரூ. 5 லட்சத்திலிருந்து, ரூ. 25 லட்சமாக அதிகப்படுத்துவது காப்பீட்டு நிறுவனங்களுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்குமே அதிக லாபத்தை கொடுக்கும். மறைந்த மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு வசித்த அரசு இல்லம் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments