கம்யூனிஸ்டுகள் ஆதரவினால்தான் இந்த அரசு நீடிக்கிறது! நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? பெ. சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பேசியது பற்றி...
கம்யூனிஸ்டுகள் ஆதரவினால்தான் இந்த அரசு நீடிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டு சா்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில், குஜிலியம்பாறை வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்தான் குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர்களைக் கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தலைமைச் செயலருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சென்னை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் பேசிய கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம்,
"எங்களுடைய மாணவர்களிடம் இருக்கும் ஒழுக்கத்தை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. அவர்களுக்கு நாங்கள் பயிற்சி தருகிறோம்.
சாய் குமார் ஐஏஎஸ் இங்கு நியமிக்கப்பட்டவர் அல்ல. தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டவர். அவருக்கு ஏன் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு உங்களுக்கு வேண்டிய ஒரு நபரை நிரந்தர தலைமைச் செயலாளராக நியமியுங்கள். யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் சாய்குமார் ஐஏஎஸ் வேண்டாம்.
உயர்கல்வி ஆணையர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி அவரிடம் விசாரணை நடக்கிறது. அதேபோல சாய்குமார் ஐஏஎஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய்குமாருக்கும் நோட்டீஸ் அனுப்புங்கள்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு இருக்கிறதா?
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். வேறு யாரும் விளக்கம் கொடுக்க முடியாது.
இந்த பிரச்னையில் யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறு செய்த வட்டாட்சியர், உயர்கல்வி ஆணையர், தலைமைச் செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான சுற்றறிக்கை
இந்த ஆட்சி தொடர்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்திருக்கிறது. இதைத் தெரியாதவரா மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர். கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்ததால்தான் இந்த அரசு நீடிக்கிறது என்று தெரிந்தபிறகும் இடதுசாரிகள் மீது இந்த உள்நோக்கத்தோடு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது என்று சொன்னால் அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா? இதுதான் அடிப்படையான கேள்வி. இந்த நடவடிக்கைகளை நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது. இந்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்" என்றார்.
This TVK government survives only because of the support of the Communists Shanmugam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.