FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

தாழ்தள ஏசி பேருந்துகளை முதல்வர் விஜய் தொடக்கி வைத்தது பற்றி...

முதல்வர் விஜய் - TNDIPR
பகிர்:

சென்னையில் புதிதாக 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் சேவையை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மொத்தம் 250 புதிய பேருந்துகளின் சேவைகளை தொடக்கிவைத்தார்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ. 134.50 கோடியில் வாங்கப்பட்ட 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடக்கி வைத்த பின், பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார்.

Advertisement

Advertisement

இதேபோல், பல்வேறு மாவட்டங்களுக்காக ரூ. 55.58 கோடியில் வாங்கப்பட்ட 120 பேருந்துகள் சேவைகளும் தொடக்கிவைக்கப்பட்டது.

இந்த தொடக்க நிகழ்வில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

summary

Chief Minister Vijay flagged off 130 new low-floor AC buses in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments