FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ராகுல் நாளை சென்னை வருகை! முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் பற்றி...

Updated On : 31 ஜூலை 2026, 10:47 am IST
ஜோசப் விஜய் | ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி முகாமில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

இதற்காக, தில்லியில் இருந்து நாளை காலை விமானம் மூலம் சென்னைக்கு வரும் ராகுல் காந்தி, இங்கிருந்து கார் மூலம் மாமல்லபுரம் செல்லவுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த பயணத்தின் போது தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் முதல்வரை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக வருகிறார் எனத் தெரிவித்தார்.

எனவே, முதல்வர் விஜய்யும் ராகுல் காந்தியும் நாளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.

முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி அழைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தில்லி சென்ற முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்திருந்தார்.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இரண்டு பேர் அமைச்சர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Rahul to visit Chennai tomorrow! Will he meet Chief Minister Vijay?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments