FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமி​ழ​க‌த்​தி​லி​ரு‌ந்து செ‌ன்ற‌ ஓ‌ய்வுபெ‌ற்ற‌ நீதி​பதி உள்பட 37 பே‌ர் மாய‌ம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் விவரம் குறித்து...

27 ஆகஸ்ட் 2026, 5:01 am IST
நேபாளத்தில் பாதுகாப்பாக உள்ள கும்பகோணத்தை சேர்ந்த 17 பேர்
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 57 பேரில் புதன்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஓய்வுபெற்ற நீதிபதி உள்பட 37 பேர் மாயமானதாகவும், எஞ்சிய 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.

கும்பகோணம் நாகேசுவரன் தெற்கு வீதியில் 'சூப்பர் யாத்ரா ஏஜென்சி' என்ற சுற்றுலா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழுவினர் ஆக. 23-ஆம் தேதி கும்பகோணத்திலிருந்து கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை புறப்பட்டனர்.

திடீர் வெள்ளப் பெருக்கு

Advertisement

Advertisement

இவர்கள் ஆக. 25-ஆம் தேதி காத்மாண்டிலிருந்து 3 வேன்களில் நேபாளம் - சீனா எல்லையில் உள்ள சியாபுருபேசி சென்றனர். புதன்கிழமை (ஆக. 26) காலையில் 57 பேரும் அங்கிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள சீன எல்லையை அடைந்து, அங்கிருந்து 26 கி.மீ. தொலைவில் சீனாவில் உள்ள கைரோங் நகரில் இரவு தங்குவதாகத் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி, 57 பேரும் புதன்கிழமை காலை 3 வேன்களில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 வேன்கள் சிக்கிக் கொண்டன. கும்பகோணத்திலிருந்து சென்ற ஒரு வேனின் பொறுப்பாளரான ரகு என்பவர், கும்பகோணத்திலுள்ள சுற்றுலா நிறுவன உரிமையாளர் சையது சாதிக்கிடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சியாபுருபேசியிலிருந்து புறப்பட்டு வந்தபோது வழியில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பலத்த சப்தம் கேட்டது. எங்களுடன் வந்த 2 வேன்களை காணவில்லை. நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

நேபாள பெருவெள்ளம் குறித்து தகவலறிந்த கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் மேற்கு காவல்துறையினர் சுற்றுலா அலுவலகத்துக்கு வந்து யாத்திரை சென்றவர்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது வட்டாட்சியர் கூறியது:

யாத்திரை சென்ற 57 பேரில், திருச்சியைச் சேர்ந்த மு. சிவரஞ்சனி (46), பா. கிருபாகிரி, சி. வள்ளிநாயகி (63), ஜெ. சத்யா, ஆர். கற்பகம் (62), சென்னையைச் சேர்ந்த மாறன், அவரது மனைவி சாந்தி, சிதம்பரத்தைச் சேர்ந்த முத்துக்குமரேசன், அவரது மனைவி மைதிலி, நவு கபீர்தாஸ், வி. விஜயபுவனேசுவரி, ர. தியாகராஜன், கனகசபை, அவரது மனைவி ராதா, பழனியப்பன், கலைமதி, ஒசூரைச் சேர்ந்த ரகுநாதன், மயிலாடுதுறையைச் சேர்ந்த ரத்தினகுமார், பூங்குழலி, மணிமேகலை ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது என்றார்.

கைப்பேசியில் தகவல்

இதுகுறித்து சுற்றுலா நிறுவன உரிமையாளர் சையது சாதிக் கூறியது: கைலாஷ் மானசரோவருக்கு கும்பகோணம் டிராவல்ஸ் அலுவலகம் மூலம் 57 பேரை மூன்று வேன்களில் காத்மாண்டிலிருந்து அனுப்பி வைத்துவிட்டு நான் ஊருக்கு வந்துவிட்டேன். எனது மகன் உமர்பாரூக் மற்றும் ரகு, வெங்கட்ராமன் ஆகியோர் 3 வேன்களுக்கு பொறுப்பாகச் சென்றனர். இவர்களில் ரகு மட்டும் புதன்கிழமை காலை 9 மணிக்கு என்னிடம் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். ரகு கூறும்போது, எனது மகன் உமர்பாரூக், வெங்கட்ராமன் ஆகியோர் சென்ற வேன்களைக் காணவில்லை என்று கூறியதாக சையது சாதிக் தெரிவித்தார்.

மாயமானவர்கள் விவரம்

கும்பகோணத்திலிருந்து யாத்திரை சென்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட 37 பேர் மாயமானது தெரியவந்துள்ளது.

அவர்கள் விவரம்: சென்னையைச் சேர்ந்த மூர்த்தி, அவரது மனைவி பத்மினி, சிதம்பரத்தைச் சேர்ந்த முருகானந்தம், ஒசூரைச் சேர்ந்த ரா. புஷ்பராணி, நெய்வேலியைச் சேர்ந்த கோ. திருமாவளவன், மயிலாடுதுறையைச் சேர்ந்த ம. புஷ்பலதா, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், ராஜேசுவரி, வெங்கட்ராமன், தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பழகி, கலைச்செல்வி, சிவயோகம், இளவரசி, தங்கமதி, சித்ரா, கும்பகோணத்தைச் சேர்ந்த ராம்குமார், கீதா, திருமலைராஜன், அவரது மனைவி தையல்நாயகி, சாய்நாத், அவரது மகள் கேதாரகௌரி, ஜெயலட்சுமி, சையது உமர் பாரூக், புவனகிரியைச் சேர்ந்த திரிபுரசுந்தரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணம்மாள், சுவாமிமலையைச் சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி ஜெயந்தி, செட்டிமண்டபத்தைச் சேர்ந்த ரமேஷ், தருமபுரியைச் சேர்ந்த பிரேமாவாணி, புஷ்பா, புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த சுந்தரி, வைஷ்ணவி, கீதா, சூளகிரியைச் சேர்ந்த திம்மராயசாமி, அவரது மனைவி மமதா, நாமக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, திருவாரூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments