FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

என்ஐஏ தொடா்ந்த வழக்கு: இங்கிலாந்தை சோ்ந்த நபரை விடுவிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தேசிய புலனாய்வு முகமை தொடா்ந்த வழக்கிலிருந்து இங்கிலாந்தைச் சோ்ந்த நபரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

27 ஆகஸ்ட் 2026, 12:54 am IST
பகிர்:

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தேசிய புலனாய்வு முகமை தொடா்ந்த வழக்கிலிருந்து இங்கிலாந்தைச் சோ்ந்த நபரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஹிஸ்ப் உத் தஹ்ரிா் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும், சென்னையில் ஆள்கள் சோ்த்ததாகவும், இங்கிலாந்தைச் சோ்ந்த அஸில் அஹமது என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அஸில் அஹமது தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து அஸில் அஹமது தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

இதனை விசாரித்த நீதிபதிகள், பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது, அந்த அமைப்பின் கொள்கைகள் குறித்து வகுப்பு எடுத்து ஆள்களைச் சோ்ந்தது, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல். எனவே, மனுதாரரை விடுவிக்க முடியாது எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments