FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஓணம் வாழ்த்து பகிர்ந்திருப்பது பற்றி...

முதல்வர் விஜய் (கோப்புப்படம்) - Youtube
பகிர்:

இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஓணம் திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையின் முக்கிய கொண்டாட்டமான திருவோணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டிருக்கும் வாழ்த்துப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

”உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!

கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Heartfelt Onam wishes to our Malayali brethren! Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments