FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மலைகளைக் காணவில்லை என்றதும் எதிர்க்கட்சிக்கு பயம்! செங்கோட்டையன் பதில்

தமிழ்நாட்டில் மலைகளைக் காணவில்லை என்றவுடன் எதிர்க்கட்சிக்கு பயம் ஏற்பட்டுவிட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

5 வினாடிகள் முன்பு
அமைச்சர் செங்கோட்டையன் - எக்ஸ்
பகிர்:

அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது ஓணம் நல்வாழ்த்துகளை இதயப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்,

தமிழ்நாட்டில், அமைச்சர் பிரபு மலைகளைக் காணவில்லை என்று பேரவையில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும். மலைகள் கீழே இருந்து கற்கள் எடுக்கப்படும் போது என்னென்ன வரிகள் கட்டப்பட்டுள்ளது? என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுவரை 18 மலைகள் காணாமல் போய் உள்ளது.

அதற்கான நடவடிக்கைளை அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். நமக்கு தேவையான பொருள்களை அண்டை மாநிலங்களில் இருந்து கூட இறக்குமதி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படும் கனிம வளங்களை, ஜல்லி, மணல் உள்ளிட்ட வளங்களை கொண்டு செல்வதற்கு தடுப்பதற்காக 20 நாள்களுக்கு முன்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழக வெற்றி கழகத்தை விலக்கி வாங்கி விட முடியாதா என்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து கேட்தற்கு, அவர்களுடைய நிலைகள் வேறு, அவர்களுடைய எண்ணங்கள் வேறு, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்த போதுதான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தோழமைக் கட்சிகள் ஏற்கனவே விளக்கி உள்ளது. அவர்கள் தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும், அவர்கள் எங்களோடு உள்ளனர்.

சட்டப்பேரவையில் பேசிய பிறகு அவை குறிப்புகள் நீக்கப்படுகிறது. மக்கள் பார்த்து வருகிறார்கள். பேரவை பதிவேட்டில் அவைகள் இருக்கக் கூடாது என்பதுதான் மரபு. அதன் அடிப்படையில் நீக்கப்பட்டு வருகிறது. எல்லோரும் பாராட்டும் வகையில் அவைத் தலைவர் செயலாற்றுகிறார். நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக விரைவாக இது செய்யப்படுகிறது.

அவை குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது குறித்து செய்தி துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பிரச்னை வருவதற்கு முன்னால் அது தெரிவதில்லை, மக்களிடம் விளம்பரமாகும் வகையில் இது போன்ற செயல்கள் செய்யப்படுகிறது, செய்தி துறையுடன் கலந்து அதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.

மேட்டூர் அணை திறப்புக்கு முதல்வர் வருவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் விரைவில் அவர்தான் முடிவு செய்வார்.

மலைகளைக் காணோம் என்று சொன்ன உடனே எதிர்க்கட்சிகளுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments