அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 25 மாவட்டங்களில் மழை!
இரவு 7 மணி வரை சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது குறித்து...
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று(ஆக. 25) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை, நீலகிரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தென்காசி, வேலூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in Chennai and 24 districts over the next two hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.