FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குளித்தலை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் லாரி ஓட்டுநர்கள் 2 பேர் பலி

குளித்தலை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி ஓட்டுநர்கள் பலியானது குறித்து....

குளித்தலை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் லாரி ஓட்டுநர்கள் 2 பேர் பலி - கோப்புப்படம்
பகிர்:

குளித்தலை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநர்கள் இரண்டும் பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கரூர் மாவட்டம் குளித்தலை குமாரமங்கலம் அருகே எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த குளித்தலை போலீசார், விபத்தில் பலியான இரண்டு லாரி ஓட்டுநர்களின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

summary

Regarding the head-on collision between two lorries near Kulithalai that resulted in the deaths of the drivers...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments