நேபாள வெள்ளம்: பாதுகாப்பாக உள்ள 21 தமிழர்களின் பட்டியல் வெளியீடு!
நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 21 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்...
நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள 100 -க்கும் மேற்பட்ட தமிழர்களில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 178 இந்தியா்கள் உள்பட 644 பேர் காணவில்லை என்று நேபாள அரசு தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் இருந்து இரு குழுக்கள் நேபாளம் சென்றதாகக் கூறப்படுகிறது. கும்பகோணத்தில் ஏஜென்சி மூலமாக என்ற 54 பேர் சென்ற குழுவில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் எஞ்சியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அதேபோல சென்னையில் இருந்து சென்ற மற்றொரு 49 பேர் கொண்ட குழு விவரங்களையும் சேகரித்து வருவதாகவும் பேரவையில் இன்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நேபாளம் செல்கிறது, அமைச்சர்களும் தில்லி செல்கின்றனர்.
இதனிடையே நேபாளத்தில் பாதுகாப்பாக உள்ள 21 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.
கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
1. சிவரஞ்சனி முத்துநாதன்
2. கற்பகம் ராஜமோகன்
3. மாறன் கோவிந்தசாமி
4. சாந்தி மாறன்
5. முத்துக்குமரேசன் ராமலிங்கம்
6. நவு கபீர்தாஸ்
7. விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்
8. மைதிலி முத்துக்குமரேசன்
9. தியாகராஜன் ரத்தினம்
10. கிருபாகரி பாலசுப்ரமணியம்
11. வள்ளிநாயகி சிவகுமார்
12. சத்ய ஜெயராமன்
13. திருமாவளவன் கோவிந்தராசு
14. கனகசபை நடேசபிள்ளை
15. ராதை கனகசபை
16. ரத்தினகுமார் குஞ்சிதபாதம்
17.பூங்குழலி பொன்னம்பலம்
18. பழனியப்பன் மாணிக்கப்பெருமாள்
19. கலைமதி பழனியப்பன்
20. ரகுநாதன் முனிராஜ்
21. கனகசபை நடேச பிள்ளை.
மேலும் இந்தியர்கள் 288 பேரைக் காணவில்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Nepal Floods: List of 21 Safe Tamils Released by MEA
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.