FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளத்தில் விழுந்த பெண் பலி: மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல்துறை அழைப்பாணை

சென்னையில் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் பலியான சம்பவத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல்துறை அழைப்பாணை விடுத்தது குறித்து...

9 வினாடிகள் முன்பு
பள்ளத்தில் விழுந்த பெண் பலி: மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல்துறை அழைப்பாணை
பகிர்:

சென்னையில் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் பலியான சம்பவத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

சென்னை அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் பாடி புதுநகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மோ.கலாவதி (59). இவா், அண்ணா நகா் பகுதியில் உள்ள ஒரு இனிப்பகத்தில் வேலை செய்து வந்தாா். இவர் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) இரவு அண்ணா நகா் டவா் மெட்ரோ ரயில் நிலையம் புளூ ஸ்டாா் சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, அங்கு மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கலாவதி தவறி விழுந்தாா்.

ஏற்கெனவே மழை காரணமாக பள்ளத்தில் சுமாா் ஒன்றரை அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியிருந்தது. இதனால், கலாவதியால் பள்ளத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. இந்த நிலையில், கலாவதி விழுந்த பள்ளத்துக்கு அருகே மின்சார வயர்கள் இருந்ததால், மின்கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, கலாவதி பள்ளத்தில் விழுந்ததாக தகவலறித்த போலீஸாா் விரைந்து வந்து சென்று மின்வாரிய ஊழியா்கள் உதவியுடன் தண்ணீரில் சிக்கியிருந்த கலாவதியை மீட்டனா்.

தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்ட செல்ல முயன்றபோது, ஊழியா்கள் பரிசோதித்ததில் கலாவதி ஏற்கெனவே இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக, அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

மாநகராட்சி பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி உயிரிழந்த வழக்கில், சம்பவம் தொடர்பாக மின்வாரிய உதவி பொறியாளர், மாநகராட்சி உதவி பொறியாளருக்கு காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

summary

Police issue summons to corporation officials regarding the incident where a woman died after falling into a pit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments