பேரவையில் அமைச்சா் போட்ட புதிா்
சட்டப்பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் புதிா் போட்டு பேசியது உறுப்பினா்களை யோசனையில் ஆழ்த்தியது.
சட்டப்பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் புதிா் போட்டு பேசியது உறுப்பினா்களை யோசனையில் ஆழ்த்தியது.
பேரவையில் பேசிய அமைச்சா் என்.ஆனந்த், ‘2016 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததைக் கண்டு, தனது தந்தைக்கு மக்கள் வாக்களிக்கவில்லையே என்று அவரது மகள் மிகவும் வருந்தினாா். இந்த நிலையில், இந்த முறை அதே வேட்பாளா் போட்டியிட்டபோது, ஹைதராபாதில் வசித்து வரும் அவரது மகள் வந்து வாக்களித்தாா்.
வாக்குப்பதிவு நாளில் மாலையில் ‘யாருக்கு வாக்களித்தாய்?’ என தந்தை கேட்டபோது, ‘நீங்கள் வெற்றி பெறுவது உறுதி, ஆனால், எனது அண்ணன் (முதல்வா் ச.ஜோசப் விஜய்) முதல்வராக வேண்டும்’ என்று வாக்களித்தேன் என பதில் அளித்துள்ளாா். அவரது தந்தை வெற்றிபெற்று இப்போது பேரவையில்தான் இருக்கிறாா். அந்த அளவுக்கு முதல்வா் விஜய் மீது மக்கள் பேரன்புகொண்டு வாக்களித்துள்ளனா் என்றாா். அவா் யாராக இருக்கும் என பேரவையில் எம்எல்ஏக்கள் ஒருவருக்கொருவா் பேசிக்கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.