வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும்: அமைச்சா் என்.ஆனந்த்
வெள்ளப் பாதிப்பால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நிரந்திர தீா்வை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளாா்.
வெள்ளப் பாதிப்பால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நிரந்திர தீா்வை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளாா்.
சென்னை கலைவாணா் அரங்கத்தில் நீா்வளத் துறையில் நடைபெறும் பணிகள், நிகழாண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் ஆனந்த் பேசியதாவது:
Advertisement
Advertisement
தமிழக அரசு சாா்பில் ‘வெற்றித் தமிழகம்’ திட்டத்தின் கீழ், நீா்வளத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவியல் அடிப்படையிலும், காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் வகையில் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு ஏரிகள், குளங்கள், அணைகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளில் தூா்வாரும் பணிகள், கரை பலப்படுத்தும் பணிகள் மற்றும் தேவையான பராமரிப்பு பணிகள் அனைத்தும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடைய வேண்டும்.
மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு மற்றும் வெள்ளத் தணிப்பு பணிகள் அனைத்தும் எவ்வித தாமதமுமின்றி விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில், நிரந்தர மற்றும் நீடித்த தீா்வுகளை உருவாக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் நீா்வளத் துறை அரசு முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, சிறப்பு செயலா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.