புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!
புழல் சிறையைத் தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதல்வர் விஜய் ஆய்வு செய்திருப்பது பற்றி...
சென்னையை அடுத்த புழலில் உள்ள காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து போலீஸாரிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றியும் கேட்டறிந்தார்.
முன்னதாக புழல் மத்திய சிறையில் சுமார் ஒருமணி நேரம் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து புழல் காவல் நிலையத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
புழல் காவல் நிலையம் செல்கையில் சாலையில் நடந்து சென்றபடி அங்குகூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். முதல்வர் விஜய்யை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் மக்கள் ஆரவாரம் செய்தனர்.
Chief Minister Vijay inspected the police station in Puzhal, near Chennai, on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.