FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2029-ல் இண்டி கூட்டணி பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்! - அமைச்சர் விஸ்வநாதன்

2029 தேர்தலில் இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என தமிழக அமைச்சர் பேச்சு...

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் - ENS
பகிர்:

2029 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என தமிழக உயர்கல்வி அமைச்சர் பி விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அடுத்ததாக 3 ஆவது இடத்தில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இடம்பெற்றுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் தவெக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள சூழலில், காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியின் 2029 தேர்தலின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என தமிழக உயர்கல்வி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஸ்வநாதன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“காங்கிரஸ் தலைவர்களாகிய நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் அன்புக்குரிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திதான் 2029 தேர்தலுக்கான இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்” எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மூத்த தலைவர்களை பின்னுக்குத் தள்ளி முதல்வர் விஜய் மூன்றாம் இடம் பிடித்துள்ள நிலையில், தவெக அமைச்சர்கள் பலரும் விரைவில் முதல்வர் விஜய் பிரதமராவார் எனக் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

TN Minister P. Viswanath has stated that Rahul Gandhi will be the PM candidate of the INDIA alliance in the 2029 Lok Sabha elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments