இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (ஆக.30,31) ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (ஆக.30,31) ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ஞாயிறு, திங்கள் கிழமை (ஆக.30,31) இரு நாள்களுக்கு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வடகடலோர தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன்கிழமை (செப்.1, 2) இரு நாள்களுக்கு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
9 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 102.92, வேலூா் - 102.02, திருத்தணி - 101.48, பாளையங்கோட்டை - 101.3, திருச்சி - 100.94, சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூா் தலா - 100.4, பரங்கிப்பேட்டை - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை (செப்.2) வரை அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பையொட்டியும் இருக்கக் கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை பதிவு: தமிழகத்தில் சேலம் மாவட்டம் கருப்பூரில் 50 மி.மீட்டா் மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள் புதன்கிழமை (செப்.2) வரை, மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.