தலித் மாணவி தற்கொலை: பள்ளித் தலைமையாசிரியை கைது
உசிலம்பட்டியில் தலித் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பள்ளித் தலைமையாசிரியை கைது செய்யப்பட்டது குறித்து...
உசிலம்பட்டியில் தலித் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பள்ளித் தலைமையாசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை உசிலம்பட்டி அருகே நிஜந்தி (16) என்ற மாணவி, நர்சிங் படிக்க விரும்பியதால், பிளஸ் 1 வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, உசிலம்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து விடுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, நிஜந்தியை அரசு மாதிரிப் பள்ளியில் சேர்ப்பதற்காக, ஆக. 24-ல் அவரது தாயார் தவமணியும் பள்ளிக்கு சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பள்ளித் தலைமையாசிரியையுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தவமணி கைகளைக் கட்டிக்கொண்டு நின்று பேசியதால், அவரின் கைகளை நிஜந்தி தட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நிஜந்தியை தலைமையாசிரியை விமலா கண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நிஜந்தி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், ஆக. 25-ல் நிஜந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், பள்ளித் தலைமையாசிரியை விமலா மீது மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு, அவரை இன்று கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Dalit girl death: School Head Master booked for abetment after alleged humiliation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.