FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு! அமைச்சர் நிர்மல் குமார் ஆலோசனை

மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அமைச்சர் நிர்மல் குமார் ஆலோசனை

அமைச்சர் நிர்மல் குமார் - DPS
பகிர்:

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று (29.08.2026) கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், குடமுழுக்கு விழா தொடர்பாக பணிகளை, இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன், சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ எம்.வி. கருப்பையா, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏவான எம்.எம்.கோபிசன், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மதார் பதூருதின், மாநகராட்சி துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments