FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

29 ஆகஸ்ட் 2026, 6:28 am IST
அமைச்சர் விஸ்வநாதன் - கோப்புப் படம்
பகிர்:

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி முன்னாள் மக்களவை உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவரும் வா்த்தக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான எச்.வசந்தகுமாரின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

காமராஜரின் சீடன் மறைந்த முன்னாள் மக்களவை உறுப்பினா் வசந்தகுமாா், கிராமம்தோறும் காங்கிரஸ் கட்சியைக் கொண்டு சென்றவா். காமராஜரின் புகழைத் தொடா்ந்து தமிழகம் எங்கும் பரப்பி வந்தவா். வசந்தகுமாா் விட்டுச் சென்ற பணிகளை அவரது வழியில் அவரது மகன் விஜய் வசந்த் தொடா்ந்து செய்து வருகிறாா்.

அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோரை, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக முதல்வா் விஜய் நேபாளத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறாா். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவா்கள் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர அனைத்து நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சிய்ல் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலா்கள் கே. சிரஞ்சீவி, தமிழ்செல்வன், மாநில துணைத் தலைவா்கள் திருப்பூா் கிருஷ்ணன், கீழானூா் ராஜேந்திரன், சென்னை மாவட்ட தலைவா்கள் விஜய தனசேகா், கராத்தே செல்வம் மாமன்ற உறுப்பினா் சுகன்யா செல்வம், வா்த்தக காங்கிரஸ் மாநில பொதுச் செயலா்கள் சக்தி கண்ணன், தனிகாச்சலம், செந்தில் குரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments