சென்னை - புது தில்லி விரைவு ரயில்கள் அக். 13 வரை ஃபரிதாபாத்தில் நிற்காது!
சென்னை - புது தில்லி விரைவு ரயில் உள்ளிட்ட 4 விரைவு ரயில்கள் வரும் அக். 13 வரை ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - புது தில்லி விரைவு ரயில் உள்ளிட்ட 4 விரைவு ரயில்கள் வரும் அக். 13 வரை ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வரும் அக். 13-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து தினமும் மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு புது தில்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (எண்: 12615) ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது. அதேபோல, திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லி செல்லும் கேரள அதிவிரைவு ரயில் (எண்: 12625) வரும் அக். 13-ஆம் தேதி வரை ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது.
ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கட்ரா நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நிலையம் வரும் அந்தமான் விரைவு ரயில் (எண்: 16032) வரும் அக். 14-ஆம் தேதி வரையிலும், ஸ்ரீ வைஷ்ணவ் கட்ரா நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஹிம்சாகா் விரைவு ரயில் (எண்: 16318) வரும் அக். 14 ஆம் தேதி வரையிலும் ஃபரிதாபாத் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.