ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தேனாம்பேட்டை அப்போலோ மாற்றம்!
தேனாம்பேட்டை அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டது பற்றி...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம், ஸ்பெஷாலிட்டி (பன்முக சிறப்பு) மருத்துவமனையாக அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் தொடங்கப்பட்ட அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம், கடந்த 33 ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி மையமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை புற்றுநோய்களுக்கான சிக்கலான மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கி வந்த நிலையில், இனி இதயவியல், நரம்பியல் மற்றும் நரம்பியல் அறிவியல், இரைப்பைக் குடலியல், நுரையீரல் மருத்துவம், முதுகெலும்பு மற்றும் எலும்பியல், சிறுநீரகவியல், தீவிர சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும் முழுமையான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகளை வழங்கவுள்ளதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த வாரம் நடைபெற்ற தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், கெளரவ விருந்தினராக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாரஸ் அஹமது ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:
“சிக்கலான மற்றும் தீவிரமான மருத்துவ நிலைகளுடன் வரும் நோயாளிகளுக்கு, பல்வேறு துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த மதிப்பீடும் சிகிச்சையும் தேவைப்படும் நிலை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு துல்லியமான நோயறிதல், தாமதமில்லாத சிகிச்சை மற்றும் நவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சிகிச்சை அவசியம்.
அந்த வகையில், தமிழ்நாடு தொடர்ந்து பொது மற்றும் தனியார் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான சூழலை உருவாக்கி வருகிறது. பொதுமக்கள் உயர்தர மற்றும் சிறப்பு மருத்துவ வசதிகளை எளிதில் பெறும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு அரசு ஆதரவளிக்கிறது” என்று அவர் கூறினார்.
Apollo Teynampet expands footprint into multi-speciality healthcare
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.