மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடு
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு குறித்த அரசாணை வெளியீடு...
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாள்களாக (ஓராண்டு) உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்டுள்ள திருமணமான அரசு பெண் பணியாளா்களுக்கு 365 நாள்களும், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசுப் பணியாளா்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை அமைச்சா் த. சரத்குமாா் அறிவித்தார்.
Advertisement
Advertisement
அப்போது, தமிழக அரசில் பணிபுரியும் பெண் பணியாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாள்களாக உயா்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசிதழில் மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 365 நாள்களாக (ஓராண்டு) உயா்த்தப்பட்டதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
One-year leave for female government employees having a third child! Government order issued.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.