ரயில்வே பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்பான்மை: புள்ளிவிவரங்களுடன் திமுக எம்.பி.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை: திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்துக்கான ரயில்வே பட்ஜெட் குறித்து மாநிலங்களவை எம்.பி.யான பி. வில்சன், "பாஜக அரசின்கீழ் தமிழகத்துக்கு 7.5 மடங்கு அதிக ரயில்வே நிதி கிடைப்பதாக மத்திய ரயில்வே அமைச்சகம் மீண்டும் மீண்டும் கூறுகிறது.
ரயில்வே நிதியானது, ஆண்டுக்கு (2009 - 14) ரூ. 879 கோடியிலிருந்து 2025 - 26 ஆம் ஆண்டில் ரூ. 6,626 கோடியாக உயர்ந்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாட்டில் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
Advertisement
Advertisement
இந்தியாவின் மொத்த ரயில்வே பட்ஜெட் சராசரியாக (2009 - 14) ரூ. 10, 623 கோடியிலிருந்து, 2025 - 26 ஆம் ஆண்டில் ரூ. 2.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 25 மடங்கு அதிகரிப்பு.
ஆனால், இந்த 25 மடங்கு தேசிய அதிகரிப்புட ஒப்பிடும்போது, ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு மடங்கு உயர்ந்தது? என்பதுதான் கேள்வி.
குஜராத் ரூ. 589 கோடியிலிருந்து ரூ. 17,155 கோடி (29 மடங்கு)
தில்லி ரூ. 96 கோடியிலிருந்து ரூ. 2,539 கோடி (27 மடங்கு)
சத்தீஸ்கர் ரூ. 311 கோடியிலிருந்து ரூ. 7,470 கோடி (24 மடங்கு)
மத்திய பிரதேசம் ரூ. 652 கோடியிலிருந்து ரூ. 14,738 கோடி (23 மடங்கு)
மகாராஷ்டிரம் ரூ. 1,171 கோடியிலிருந்து ரூ. 23,778 கோடி (20 மடங்கு)
உத்தர பிரதேசம் ரூ. 1,109 கோடியிலிருந்து ரூ. 19,858 கோடி (18 மடங்கு)
ராஜஸ்தான் ரூ. 682 கோடியிலிருந்து ரூ. 9,960 கோடி (15 மடங்கு)
ஒடிசா ரூ. 838 கோடியிலிருந்து ரூ. 10,599 கோடி (12.5 மடங்கு)
ஆந்திர பிரதேசம் ரூ. 886 கோடியிலிருந்து ரூ. 9,417 கோடி (11 மடங்கு)
ஹரியாணா ரூ. 315 கோடியிலிருந்து ரூ. 3,416 கோடி (11 மடங்கு)
பிகார் ரூ. 1,132 கோடியிலிருந்து ரூ. 10,066 கோடி (9 மடங்கு).
ஆனால், தமிழ்நாட்டுக்கு ரூ. 879 கோடியிலிருந்து ரூ. 6,626 கோடி (வெறும் 7.5 மடங்கு மட்டுமே).
தேசிய ரயில்வே பட்ஜெட் 25 மடங்கு உயர்ந்தபோதும், தமிழ்நாடு மட்டும் 7.5 மடங்குதான் உயர்ந்தது.
ஒரு மாநிலத்துக்கு 29 மடங்கு; மற்றொரு மாநிலத்துக்கு 7.5 மடங்கு கிடைக்கும்போதே, உண்மை தெளிவாகிறது.
இது தமிழ்நாட்டின் மீது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை அம்பலப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
When the national railway budget grew 25×, Tamil Nadu grew only 7.5× says Rajya Sabha MP Wilson
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.