மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்! முதல்வர் வாக்குறுதி!
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி பற்றி...
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான தொகை ரூ. 2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 இன்று காலை மகளிர் உரிமைத் தொகை கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டு முதல்வர் பதிவிட்டிருப்பதாவது:
Advertisement
Advertisement
”தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Women's entitlement amount will be increased to Rs. 2,000! Chief Minister's promise!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.