திமுக கூட்டணி: பிப். முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை?
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது தொடர்பாக...
தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக, பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
வரும் பிப். 3 ஆம் தேதிக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவும், பாஜகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்தன. இந்தக் கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாகா, அமமுக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
Advertisement
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தையை மெதுவாக நகர்த்தி வரும் திமுக, கடந்த தேர்தல்களில் அங்கம் வகித்த பிரதான கட்சியான காங்கிரஸ் உடன் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை.
இதனிடையே, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து திமுக, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளது.
கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிக்கயிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Information has emerged that the DMK will begin seat-sharing negotiations in the first week of February.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.