முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!

சென்னையில் வெளுத்து வாங்கும் மழையால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மக்கள் அவதி

Updated On : 9 ஜூலை 2026, 6:16 pm IST
சென்னையில் பலத்த மழை
பகிர்:

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கல்லூரிகள், அலுவலகம் சென்றோர் வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

சென்னை அம்பத்தூர், தாம்பரம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எல்ஐசி, பாரிமுனை, மயிலாப்பூர், ஆவடி, பட்டாபிராம் என பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னையில், இன்று வழக்கம் போலவே வெய்யில் வாட்டி வதைத்தது. ஆனால், 4 மணிக்கு மேல் வெய்யில் மறைந்தது. திடீரென எங்கிருந்தோ வந்த கருமேகங்கள் சென்னையை சுற்றி வட்டமிட்டன.

Advertisement

Advertisement

மாலை 5.30 மணிக்கெல்லாம், சென்னையின் வானிலையே ரம்மியமாக மாறியது. ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத வகையில் 6 மணிக்கெல்லாம் கருமேகங்கள் மழையைப் பொழிந்தன. மழை என்றால், பலத்த மழையல்ல... கன மழை. சப்தமே கேட்கும்போது மனதை பதற வைத்தது.

சென்னையில் அதிலும் சரியான மாலை நேரத்தில் பெய்த மழையால், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments