FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்

திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் காலமானார் குறித்து...

திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருமான செழியன் - டிஎன்எஸ்
பகிர்:

சென்னை: திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை(ஜூலை 10) சென்னையில் காலமானார்.

சில ஆண்டுகளாகவே செழியன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.

கடந்த மாதம் தமிழ் திரையுலகின் இருபெரும் இயக்குநர்களான பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் காலமான சோகமே மறையாத சூழலில், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் காலமான செய்தி தமிழ் திரையுலகினர், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான செழியன், ஒளிப்பதிவில் அதிக ஆர்வம் கொண்டதால் திரையுலகம் பக்கம் வந்தார். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாராகவும், சில படங்களில் துணை இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர் சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி திரைப்படத்தில் சில பாடல்களை படமாக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சுடும் நிலவு, சுடாத சூரியன் பாடலை ஒளிப்பதிவு செய்த விதம் ஆச்சரியத்தை அளித்தது. இதையடுத்து இயக்குநர் பாலாஜி சக்திவேல், 'கல்லூரி' படத்திற்கான ஒளிப்பதிவு வாய்ப்பை வழங்கினார். இதனைத்தொடர்ந்து 'பா' வரிசை இயக்குநர்களான பாலச்சந்தர், பாரதிராஜா நடித்த ரெட்டச்சுழி, நடிகர் விஜய் சேதுபதியின் முதல் படமான தென்மேற்கு பருவக்காற்று படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

இதையடுத்து இயக்குநர் பாலாவின் 'பரதேசி, தாரைதப்பட்டை' படங்கள் அவருக்கு பெரும் திருப்பத்தை அளித்தது. பின்னர் 'டூ லெட்' படத்தை அவரே எழுதி இயக்கினார். இந்த படம் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

summary

Cinematographer and director Chezhiyan has passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments