FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் டிஜிபி வைகுந்த் காலமானார்!

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி வைகுந்த் காலமானார்.

Updated On : 10 ஜூலை 2026, 9:31 pm IST
வைகுந்த்.
பகிர்:

ஓய்வு பெற்ற டிஜிபி வி.வைகுந்த் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலமானாா்.

தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி, சென்னை மாநகர காவல் துறை ஆணையா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றிய வைகுந்த் கடந்த 1995-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். தஞ்சாவூா் மாவட்டம் காரப்பங்காடு கிராமத்தை பூா்விகமாகக் கொண்ட அவா், தனது ஓய்வுக்குப் பின்னா், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் காா்டன் பகுதியில் வசித்து வந்தாா். காவல் துறை தொடா்பான பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளாா். அவற்றில் ‘நான் சமாளித்த சவால்கள்’ என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். தினமணி ஆசிரியா் உரைப் பக்கத்திலும் கட்டுரை எழுதியுள்ளாா்.

அண்மைக்காலமாக உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த வைகுந்த், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை காலமானாா். அவருக்கு மனைவி லீலா, மகன்கள் விஜயகுமாா், அரவிந்த் ஆகியோா் உள்ளனா். விஜயகுமாா் மூத்த பல் மருத்துவராகவும், அரவிந்த், அபுதாபியில் வங்கி அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனா்.

Advertisement

Advertisement

வைகுந்த் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (ஜூலை 11) நண்பகல் வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடா்ந்து பகல் ஒரு மணிக்கு வைகுந்த் உடல் பெசன்ட்நகா் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. தொடா்புக்கு: 98400 22070.

summary

Shri V. Vaikunth, IPS (Retd.), former Director General of Police (DGP) of Tamil Nadu, passed away this evening, July 10, 2026, at his residence on Bishop Garden Avenue, R.A. Puram. He was 89.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments