FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதி

தொகுதி மறுவரையறையை தமிழ்நாடு ஏற்காது என்று முதல்வர் விஜய் தெரிவித்தது பற்றி...

Updated On : 10 ஜூலை 2026, 1:05 pm IST
முதல்வர் விஜய் - TNDIPR
பகிர்:

தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.

கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக கரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஜோசப் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மேக்கேதாட்டு அணை, தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் விஜய் பேசியதாவது:

Advertisement

Advertisement

”மேக்கேதாட்டு அணை குறித்து விஜய் ஏன் பேசவில்லை, என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் மனுவை உச்ச நீதிமன்றம் எப்போது, யார் ஆட்சியில் நிராகரிக்கப்பட்டது. முந்தைய ஆட்சியில் சரியாக வாதாடவில்லை என்று எங்களால் கேள்வி எழுப்ப முடியும்.

அந்த மாநில முதல்வர் பேசுகிறார், நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டின் உரிமையை எங்கள் நிலை நிறுத்த வேண்டுமோ, அதற்காகதான் பணியாற்றுகிறோம். சவால் விடுவது, பழிப் போடுவது நமது அரசியல் கிடையாது. குறைவாக பேசு, அதிகமாக வேலை செய் என்பதுதான் எனது கொள்கை.

மத்திய அரசு, தொகுதி மறுவரையறை செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது. அதுபோன்ற எவ்வித தொகுதி மறுவரையறையையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது. அதை யாரும் பறிக்கவும் விட மாட்டோம்.

நாம் இப்படி இருக்கும்போது, இந்த தீய சக்தி யாரின் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்த தீய சக்தியும், தீஞ்சு போன சக்தியும் வேறு வேறல்ல, கூட்டுக் களவானிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அவர்களால் அறிவிக்க முடியுமா? நிரூபிக்க முடியுமா? வருகின்ற இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்றார்.

summary

Tamil Nadu will never accept the delimitation of constituencies! Chief Minister Vijay asserts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments