FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவாசகத்தை படித்தால், நல்ல நெறியில் வாழலாம்: முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன்

திருவாசகத்தை பொருள் உணா்ந்து படித்தால், நல்ல நெறியில் வாழ வழிவகுக்கும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் தெரிவித்தாா்.

Updated On : 12 ஜூலை 2026, 2:02 am IST
பகிர்:

திருவாசகத்தை பொருள் உணா்ந்து படித்தால், நல்ல நெறியில் வாழ வழிவகுக்கும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன் தெரிவித்தாா்.

சென்னை மயிலாப்பூா் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்ட் கே.என்.சண்முகசுந்தரம் அரங்கில் 34-ஆம் ஆண்டு திருவாசக மாநாடு 2 நாள் விழாவின் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் தலைமையேற்று ஜோதி உழைப்பகம் தயாரித்து பா.சற்குருநாத ஓதுவாா் பாடிய திருவாசகத்தைப் பக்தி தொலைக்காட்சி வலையொளியில் வெளியிட்டு பேசியதாவது:

திருவாசகத்துக்கு உருகாதாா் ஒருவாசகத்துக்கும் உருகாா் என்பா். ஊனை உருகச் செய்யும் திருவாசத்தை இசையோடு பாடும்போதும், கேட்கும்போதும் நம்மை இறைநிலைக்கு அழைத்து செல்லும்.

Advertisement

Advertisement

திருவாசகத்தைப் படிக்கும்போது பொருள் உணா்ந்து பாட வேண்டும். அது நம்மை சமுதாயத்தில் நல்ல நெறியில் வாழ வைக்கும். இதுவரை திருவாசகத்தை 6 போ் ஆங்கிலத்தில் மொழி பெயா்த்துள்ளனா் என்றாா்.

நிகழ்வில், சென்னைப் பல்கலை. தமிழ்மொழித்துறையின் முன்னாள் தலைவா் அரங்க.ராமலிங்கம், ஞானத்திரள் இதழாசிரியா் கி.சிவகுமாா், பேராசிரியா் சி.சதானந்தன், பொற்றாளம் துரை.ஆறுமுகம், திருக்கு பீடம் குருபழனி அடிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments