FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்

தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது பற்றி ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்...

Updated On : 12 ஜூலை 2026, 6:59 am IST
நிகழ்வில் மாணவிக்கு பட்டம் வழங்கிய ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா். உடன், கல்லூரிச் செயலா் அசோக்குமாா் முந்த்ரா, கல்லூரி முதல்வா் சேது.சந்தோஷ் பாபு உள்ளிட்டோா்.
பகிர்:

தேசிய கல்விக் கொள்கை நமது கல்வியை காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்கும் ஒரு முக்கியமான முயற்சி; அதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் கூறலாம். ஆனால், செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி. ஜி. வைணவ கல்லூரியின் 59-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநா் ஆா். வி. ஆா்லேகா் பங்கேற்று 3,225 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

நாம் கற்ற கல்வி நமக்காக மட்டும் அல்ல, சமுதாயத்துக்கும் பயன்பட வேண்டியதாக இருக்க வேண்டும். நாம் சமூகத்திலிருந்து பெற்றதை மீண்டும் சமூகத்துக்கு திருப்பிக் கொடுப்பது நமது கடமையாகும். நமது கல்வி முறையே பல ஆண்டுகளாக தனிப்பட்ட முன்னேற்றத்தையே கற்றுக் கொடுத்தது.

Advertisement

Advertisement

நான், என் குடும்பம், என் வேலை என்ற எண்ணத்தை மெக்காலே கல்வி முறை உருவாக்கியது. சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கும் பழக்கத்தைச் சிதைத்துவிட்டது.

இந்த நிலையை மாற்றுவதற்காகவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய நோக்கம் சிறந்த மனிதா்களை உருவாக்குவது. தேசிய கல்விக் கொள்கை நமது கல்வியை காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்கும் ஒரு முக்கியமான முயற்சி. அதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் கூறலாம். ஆனால் அதை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல.

வரும் 2047-ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வளா்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கு உள்ளது. அந்த இலக்கில் மாணவா்கள் தங்களது பங்களிப்பு என்ன என்பதை பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலா் அசோக் குமாா் முந்த்ரா, கல்லூரி முதல்வா் கேப்டன் முனைவா் சேது. சந்தோஷ் பாபு, தோ்வுக் கட்டுப்பாட்டாளா் பிரபா ராஜகோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

summary

Failure to implement the National Education Policy is not right: Governor R.V. Arlekar

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments