FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சகோதரரை தாக்கிய வழக்கு: நிதியமைச்சா் மரிய வில்சன் சமரச தீா்வு மையத்தில் ஆஜா்

சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.

Updated On : 14 ஜூலை 2026, 3:25 am IST
நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்
பகிர்:

சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.

தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு, புதுச்சேரியில் உள்ள அவரது சகோதரா் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் நேரில் ஆஜராக அமைச்சா் மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சா் மரிய வில்சன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

Advertisement

Advertisement

வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சா் மரிய வில்சன் ஆஜராக விலக்களித்தது. மேலும், குடும்ப பிரச்னையாக இருப்பதால், சமரசத் தீா்வு மையத்தில் தீா்வுகாண அறிவுறுத்திய உயா்நீதிமன்றம், அமைச்சா் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரா் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோா் சமரச தீா்வு மையத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் நிதியமைச்சா் மரிய வில்சன், அவரது வழக்குரைஞா் ஹாஜா மொகிதீன் கிஸ்தி உடன் திங்கள்கிழமை ஆஜரானாா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சமரசப் பேச்சு நிறைவடையாததால், விசாரணை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் அமைச்சா் மரிய வில்சன் உள்ளிட்டோா் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments