2015-ஆம் ஆண்டுக்குப் பின்.. மிக வெப்பமான ஜூலை மாதம்!
2015-ஆம் ஆண்டுக்குப் பின் மிக வெப்பமான ஜூலை மாதம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன
தமிழ்நாட்டில், வழக்கமான ஜூன் மாதம் பருவமழை தொடங்கியதும், வெய்யில் தன்னுடைய வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களும் வெய்யில் காலமாகவே மாறிவிட்டது.
இந்த நிலையில்தான், வானிலை நிலவரங்களை கணித்து மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொல்லி வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கடலூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக வெப்பமாக காணப்படும் ஜூலை இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதற்கேற்ப, ஜூலை மாதத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
எப்போதுமே வெய்யில் அதிகம் வாட்டும் வேலூரில் வெய்யில் சதமடிக்கத் தொடங்கியிருக்கும் ஜூலை மாதத்தில், குளுகுளுவென இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளிலும் பகல் வேளையில் வெய்யில் சுட்டெரிப்பதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, வரும் நாள்களில் சென்னையில் வெய்யில் 40 டிகிரியைத் தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.