சேலம் அருகே கொடூரம்: இரு குழந்தைகளைக் கொன்று, தந்தை தற்கொலை!
மேட்டூர் அருகே இரண்டு குழந்தைகளைக் கொன்ற தந்தை.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, தன்னுடைய இரு குழந்தைகளைக் கொன்று, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு (26) கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா (22) கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு மைவிழி (4) தர்ஷன் (2) என்ற குழந்தைகள் இருந்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது மாமியாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் ஸ்ரீபிரியா மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
Advertisement
Advertisement
மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல நேற்று வல்லரசு தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். நேற்று இரவு வல்லரசு தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாத மனைவி ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீபிரியாவின் தாயார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர்.
இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். கட்டடத் தொழிலாளி வல்லரசு தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். வல்லரசு தனது குழந்தைகளைக் கொலை செய்து, பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மூன்று சடலங்களையும் மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொறுப்பு இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
An incident near Mettur in Salem district, where a father killed his two children and then committed suicide by hanging himself, has caused a stir.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.