FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்ஜியம்; யாராலும் அசைக்க முடியாது!

நலம் டிஎன் இணையதள தொடக்க விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேசியது...

Updated On : 14 ஜூலை 2026, 11:13 am IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - TNDIPR
பகிர்:

தமிழ்நாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்ஜியம், இதை யாராலும் அசைக்க முடியாது என்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஜோசப் விஜய், 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், ரூ. 139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 மருத்துவக் கட்டடங்களை திறந்துவைத்து, நவீன உபகரணங்கள் பயன்பாட்டை தொடக்கிவைத்தார்.

Advertisement

Advertisement

இதனிடையே, மருத்துவத் துறையைச் சார்ந்த நலம் டிஎன் என்ற புதிய இணையதள சேவையையும் முதல்வர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வரலாற்றில் இது ஒரு பொன் நாள். பணி நியமன ஆணைகள், மருத்துவக் கட்டடங்கள் திறப்பது மட்டுமின்றி, நலன் டிஎன் என்ற கனவுத் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:

”அதிகார நாற்காலியில் அமர்ந்து உத்தரவு பிறப்பிப்பவர் உண்மையான தலைவர் அல்ல, மக்களின் இதயங்களில் அமர்ந்து, அவர்களின் துயர் துடைப்பவரே உண்மையான தலைவர். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்கிக் கொண்டிருப்பவர் முதல்வர் விஜய்.

அன்னை தெரஷா கூறியது போன்று, செய்யும் செயலில் எவ்வளவு அன்பு இருப்பது என்பதே முக்கியம். அதிகாரம் தலைமையின் அடையாளம் அல்ல, அன்புதான் தலைமையின் அடையாளம். அந்த வகையில், ஒவ்வொரு செயலிலும் இந்த மண் மீதும், மக்கள் மீதும் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட தலைவர்தான் நமது முதல்வர் விஜய்.

தற்போது தமிழ்நாட்டில் நடந்துக் கொண்டிருப்பது அன்பு சாம்ராஜ்ஜியம். இதை யாராலும் அசைக்க முடியாது.” என்றார்.

மேலும், நலம் டிஎன் குறித்து பேசிய அமைச்சர்,

”திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளை கொண்டாட விரும்புபவர்கள் 'நலம் TN' அமைப்புக்கு நன்கொடை வழங்கலாம். எந்த மருத்துவமனைக்கு நீங்கள் நிதி கொடுக்க விரும்புகிறீர்களோ அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து நன்கொடை தரலாம். உங்களிடம் இருந்து பெறப்படும் நிதி வெளிப்படுத்தன்மையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

summary

Tamil Nadu is an empire of love; it cannot be shaken by anyone - Minister Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments