திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களை ஒதுக்கீடு செய்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு...
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி, நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் வழங்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எம்பிபிஎஸ் இடங்கள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கடந்த திமுக ஆட்சியில் இந்த கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
2026- 27 முதல் கூடுதல் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 additional medical seats for Thiruvallur Medical College
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.