FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவு: ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பற்றி...

மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம். - DIN
பகிர்:

ஓசூர் அருகே மாநில எல்லை அத்திப்பள்ளியில் கன்னட கூட்டமைப்புகள் சார்பில் மேக்கேதாட்டுவில் அணை கட்ட வேண்டும், பெங்களூர் மாநகரத்திற்கு குடிநீர் ஆதாரம் பெருக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னட செலுவளி மாநில தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ஜாக்ருதி வேதிகே மாநில தலைவர் தேவா, கன்னட ரக்ஷண வீதி மாநில தலைவர் நாராயண செட்டி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி ஆர்ச் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டிட வேண்டும், கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரத்திற்கு தேவையான குடிநீர் ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement

Advertisement

கன்னட கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரச்னைகளைத் தடுக்கும் வகையில் அத்திப்பள்ளி போலீசார் பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து தமிழகப் பகுதிக்கு செல்லாதவாறு கன்னட அமைப்பினர் தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும் காலை முதல் மதியம் ஒரு மணி வரை தமிழக பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தன.

அதைப்போல பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறநகர் பேருந்துகளான தமிழக மற்றும் கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இருசக்கர வாகனங்கள், கார், லாரி, மற்ற சரக்கு வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூரில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

மேகதாது அணை விவகாரத்தில் கன்னட அமைப்புகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதால் தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. சில தனியார் பேருந்துகள் மட்டும் ஓசூரில் இருந்து பெங்களூரிற்கு இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை வரை போக்குவரத்து வசதிகளில் சிக்கல் நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

Kannada organizations protest at Hosur border to Support for Makedhatu dam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments