முதல்வர் விஜய்யுடன் கேரள உள்துறை அமைச்சர் சந்திப்பு!
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யுடன் கேரள மாநில அமைச்சர் சென்னிதலா சந்திப்பு...
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை கேரளத்தின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று (ஜூலை 15) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக நடைபெற்றதாகத் தமிழக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, போதைப் பொருளுக்கு எதிராக கேரள அரசு மேற்கொண்டு வரும் “ஆபரேஷன் டூஃபான்” நடவடிக்கையில் தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டுமென முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, அமைச்சர் சென்னிதலா கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இத்துடன், கேரள அரசின் அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் விஜய் விரைவில் கேரளத்துக்குப் பயணம் மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கேரள அரசின் சார்பில் எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளையின் “கயிறு” நாவல் முதல்வர் விஜய்க்குப் பரிசளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக அமைச்சர் என். ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Kerala Home Minister Ramesh Chennithala met Tamil Nadu CM Vijay in person and held discussions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.