இன்றைய செய்திகள் ஜூலை 15 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
திருச்செந்தூர் மாநாடு ரத்து
வீ தி லீடர்ஸ் (We The Leaders) - இது நம்ம இயக்கம் அமைப்பின் திருச்செந்தூர் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியாகிரக போராட்டம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை முன்பாக சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்
தமிழக பேருந்துகள் நிறுத்தம்
கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக - கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!
திருப்பூர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!
மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவு: ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
ஓசூர் அருகே மாநில எல்லை அத்திப்பள்ளியில் கன்னட கூட்டமைப்புகள் சார்பில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட வேண்டும், பெங்களூர் மாநகரத்திற்கு குடிநீர் ஆதாரம் பெருக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், 'அமைச்சரவையில் இடம்பெறுவோம்' என எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை - பெ. சண்முகம்
முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
செந்தில் பாலாஜி கடிதம்
தமிழகத்தில் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களிடம் தி.மு.க நிர்வாகிகள் பேரம் பேசியாத த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் இதுவரை 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
புதுப்புது வடிவங்களில் வெளியிடும் மொழித் திணிப்பு சுற்றறிக்கையை சிபிஎஸ்இ திரும்பப் பெற வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 15, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.
மாணிக்கம் தாகூர் கண்டனம்
கல்வித்துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மோடி புகழாரம்
நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர் என அவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்
நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர் காமராஜர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாகர்கோவில் காவல் மரணம்
நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மூவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் மரியாதை
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் விஜய் புகழாரம்
மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் என முதல்வர் ச. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.