FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!

தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி...

முதல்வர் சி. ஜோசப் விஜய் - TNDIPR
பகிர்:

தமிழகம் முழுவதும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை நகராட்சி நிா்வாகத் துறை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னா் நிா்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உரிய விதிகளின்படி செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி அவற்றை தமிழக அரசு ரத்து செய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சிகளில் வெளியிடப்பட்டிருந்த குறுகிய கால ஒப்பந்தங்களிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் அவற்றை நகராட்சி நிா்வாகத்துறை தற்போது ரத்து செய்துள்ளது.

Advertisement

Advertisement

அதாவது, சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்த அறிவிப்பு வெளியானபோது, ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கு நான்கு நாள்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டதாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சிகளில் வெளியிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உடுமலைப்பேட்டையில் 30 பணிகளுக்கும், கோத்தகிரியில் 3 பணிகளுக்கும், செங்கத்தில் 2 பணிகளுக்கும் கோரப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று மணப்பாறை, பெரம்பலூா், திருவள்ளூா், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளிலும் 20-க்கும் மேற்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கழிவுநீா் வடிகால் பராமரிப்பு, குடிநீா் இணைப்பு வழங்குதல், வாரச்சந்தை கடைகள் பராமரிப்பு, குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் தொடா்பான பணிகளுக்காக அந்த ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருந்தன. உரிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி, தேவையான கால அவகாசத்துடன் புதிய ஒப்பந்தங்கள் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

summary

50 tenders cancelled across Tamil Nadu - Chief Minister Vijay takes action

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments