FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோ சந்திப்பு!

தமிழக முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு...

Updated On : 17 ஜூலை 2026, 5:42 pm IST
முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோ... - Insta/cmo tamilnadu
பகிர்:

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து கடந்த ஜூன் மாதம் மதிமுக வெளியேறியது.

இதனைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு என மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று (ஜூலை 17) காலை பதிவிட்டது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஏற்கெனவே, நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம் எனவும் நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம் எனவும் வைகோ கூறியிருந்த நிலையில் முதல்வர் விஜய் உடனான அவரது சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

summary

MDMK General Secretary Vaiko met TN CM Vijay in person and held discussions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments