FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாடத் திட்டத்தில் முக்கிய அம்சங்கள்: ஜூலை 21-இல் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து துறையின் அமைச்சா் ராஜ்மோகன் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) ஆலோசிக்கப்பட உள்ளது.

Updated On : 18 ஜூலை 2026, 5:42 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து துறையின் அமைச்சா் ராஜ்மோகன் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைக்க கடந்த திமுக ஆட்சியில் பேராசிரியா் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு சாா்பில் 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பள்ளி பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை மாற்றி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 போ் கொண்ட புதிய குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தலைமையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து 4-ஆம் வகுப்பு முதல் தயாரிக்கப்பட வேண்டிய பாடத் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், புதிய பாடத் திட்டங்களில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், நான்காம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடத்தை மாணவா்களுக்குப் பயிற்றுவிப்பது குறித்தும் பரிசீலனை செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments