FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்!

2024 - ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன.

Updated On : 18 ஜூலை 2026, 8:06 pm IST
அமரன், தண்டகாரண்யம் பட போஸ்டர். - படங்கள்: இன்ஸ்டா / சிவகார்த்திகேயன்
பகிர்:

2024 - ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன.

இந்திய திரையுலகின் உயரிய விருதான தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் தமிழ்த் திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் 9 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளன. சிவகார்த்திகேயனின் அமரன் 3, விஜய் சேதுபதியின் மகாராஜா 2, தனுஷின் கேப்டன் மில்லர் 2, மெய்யழகன் 1, ராயன் 1 என மொத்தம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளன. இவை தவிர தமிழ் ஆவணப் படமான ப்ளு படமும் விருது ஒன்றை வென்றுள்ளது.

Advertisement

Advertisement

அமரன்

• சிறந்த படத்தொகுப்பு( ஆர். கலைவண்ணன்)

• சிறந்த இயக்குநர்(ராஜ்குமார் பெரியசாமி)

• சிறந்த பின்னணி இசை (ஜிவி பிரகாஷ் குமார்)

மகாராஜா

• சிறந்த சண்டைப் பயிற்சி( அனல் அரசு)

• சிறந்த துணை நடிகை( சச்சனா நாமிதாஸ்)

கேப்டன் மில்லர்

• சிறந்த நடிகர்(சிறப்பு பிரிவு)( தனுஷ்)

• சிறந்த சமூக அக்கறை

பெய்யழகன்

• சிறந்த ஒலிப்பதிவு ( சுரேன் ஜி)

ராயன்

சிறந்த தமிழ்ப் படம்

தமிழ் ஆவணப் படம்(ப்ளு)

சிறந்த சவுண்ட் டிசைனர்( டிஎஸ் ஹரிஹர சுதன்)

summary

Tamil cinema has bagged a total of 9 honors at the National Film Awards for the year 2024.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments