FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி

அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பது பற்றி...

Updated On : 18 ஜூலை 2026, 4:18 pm IST
அம்மா உணவகம் - கோப்புப் படம்
பகிர்:

அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1,04,102 ஆக உயர்ந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிட தொழிலாளர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்கள் பயன் பெறும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மற்றும் நோயாளிகள், அவர்களின் துணைவருபவர்கள் பயன்பெறும் வகையில் ராயபுரம், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் என மொத்தம் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் காலை நேரத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், மதிய நேரத்தில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் கருவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் மற்றும் மாலை நேரத்தில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில் தற்போது தினசரி சராசரியாக 1,04,102 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.87,60,489/- வருவாய் வரப்பெற்ற நிலையில் தற்போது ரூ.1,35,78,548/-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலாளர்களுடன் முதல்வர் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

summary

The Greater Chennai Corporation has stated that the number of people using Amma Canteens daily has increased to 1,04,102.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments