FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு இதுவரை ரூ. 1,140 கோடி நஷ்டம்!

அம்மா உணவகங்களில் மலிவு விலையில் உணவு வழங்குவதால் நேரிடும் நஷ்டம் பற்றி மாநகராட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்...

Updated On : 30 ஜூலை 2026, 1:19 pm IST
அம்மா உணவகம் - கோப்பிலிருந்து
பகிர்:

அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 90 கோடி நஷ்டம் ஏற்படுவதாகத் துணை மேயா் மு. மகேஷ்குமாா் தெரிவித்தாா்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் இதுபற்றி மேலும் அவர் தெரிவித்தது:

சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களுக்கு ஆரம்பம் முதல் தற்போது வரை மாநகராட்சி சாா்பில் ரூ.1,446 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 380 கோடியே வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி மாநகராட்சிக்கு ரூ.1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆண்டுக்கு ரூ. 90 கோடி என அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டுவருவது தெரிய வருகிறது. ஆகவே, நகராட்சித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வரிடம் அதிகாரிகள் சிறப்பு நிதி பெற்றுத்தர வேண்டும். மாநகராட்சிக்கான சிறப்பு நிதியையும் பெறுவது அவசியம் என்று குறிப்பிட்டார் மகேஷ் குமார்.

summary

loss due to amma canteens in chennai corporation

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments